நடனம் ஆடிய போது சோகம்.. கல்லூரி மாணவி மாரடைப்பால் பலி!!

535

மங்களூருவில்..

நடனம் ஆடிய போதே மரணம், விளையாடிக் கொண்டிருந்த போதே மரணம், பள்ளி மாணவன் மயங்கி சரிந்து மரணம், மணமேடையில் மரணம் என இளவயது மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிகழ்வுகள் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா நெரியா பகுதியில் வசித்து வருபவர் 19 வயது சுமா.

இவர் மங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுமா நீண்ட நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.

ஆகஸ்ட் 9ம் தேதி மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுமா தனது வீட்டில் மயங்கி சரிந்து விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சுமாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்.

சுமா ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களில் குடகு, துமகூரு, மங்களூரு பகுதிகளில் 6 மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

அதே போல் பள்ளியில் பிரார்த்தனை பாடல் பாடிக் கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் உயிரிழப்புக்கள் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.