விருதுநகரில்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்து ராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசீந்திரன். முதலில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் தற்போது டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷீலாராணி . இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.இவரது மனைவி ஷீலா ராணி ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வந்தார்.
சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வரும் ஷேக் முகமதுயாசின் ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்பவர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் கிடையாது. 10 வருடங்களுக்கு முன்பு ஷீலாராணியும், சேக் முகமதுயாசினும் திருமணத்திற்கு முன்பாக சிவகாசி புது ரோட்டு தெருவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர்.
அப்போது முதல் இருவருக்கும் பழக்கம் தான். ஷேக் முகமது யாசின் வெளிநாட்டு வேலைக்கு சென்ற சமயத்தில் ஷீலாவுக்கு திருமணமாகிவிட்டது.மீண்டும் காதலை புதுப்பிக்கும் வகையில் இருவரும் தினசரி செல்போனில் பேச்சு தொடர்ந்தது. அதிகமாக கடன் இருந்து, பணத்தட்டுப்பாடு உள்ளதால் ஷீலா ராணியிடம், சேக் முகமதுயாசின் பண உதவி கேட்டுள்ளார்.
கடந்த 4 ம் தேதி வெள்ளிக்கிழமை ராதாகிருஷ்ணன் காலனி பகுதியில் ஒப்பனை பணிக்காக செல்வதாக கூறிவிட்டு ஷீலா ராணி சென்றுள்ளார். பணி முடிந்து ஷீலா ராணி வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சுசீந்திரன், தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் 5ம் தேதி சனிக்கிழமை புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர்.ஷேக்முகமது யாசின் அளித்த வாக்குமூலத்தில், சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு ஒப்பனை பணிக்காக வந்தஷீலா ராணியை தான் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசியதை ஒப்புக்கொண்டார்.
அவரை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு திருத்தங்கலிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும்,அங்கு பணம் கேட்டபோது தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய ஷீலாராணியிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள தங்கச் செயினை கேட்டுள்ளார் ஷீலா ராணி தர மறுத்ததால் செயினை பறித்துக் கொண்டு அவரை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞர் ஷேக்முகமது யாசின் கைது செய்யப்பட்டுள்ளார்.