மன்னாரில் இளம் பெண்ணின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குழந்தையின் தாயான இளம் பெண் கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவனால் இடையிடையே துன்புறுத்தலுக்கு உள்ளாகிய காரணத்தினால் மனவிரக்தி அடைந்த நிலையில் தற்கொலைக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
றெஜினோல்ட் வாசுகி என்ற 22 வயதான தாயே அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் மன்னார் நறுவிலிக்குளம் மாதிரி கிராமத்தில் நேற்று முன்தினம் (17.08.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக மரண விசாரனை மூலம் தெரியவருகின்றது.
இந்த சம்பவம் மன்னார் மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதை காட்டுகின்றது.
இம் மாத ஆரம்பத்தில் யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் மடு பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரின் உடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.