இந்தியாவில் களைகட்டும் மீனை விழுங்கும் வினோத வைத்தியம்!! (வீடியோ)

743

இந்தியாவில் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வைத்தியமாக மீனை உயிருடன் விழுங்கும் பழக்கம் கால காலமாக நடந்து வருகிறது. ஹைதராபாத் நகரில் பாரம்பரிய வைத்தியமாக மீனை உயிருடன் விழுங்கி ஆஸ்துமாவை குணப்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் யூன் மாதத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகின்றனர். இந்த வைத்தியத்தில் உயிருடன் உள்ள மீனில் ஒரு வகையான மஞ்சள் மூலிகையை தடவி கொடுகின்றனர்.

இந்த மூலிகையின் சூத்திரம், தயாரிக்கும் பத்தினி கவுட் என்ற குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த விடயமாகும். மூலிகையும், 5 செ.மீ அளவுள்ள மீனும் தொண்டையை சுத்தம் செய்து நோயை நீக்கிவிடும் என தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து உண்டால் ஆஸ்துமா குணமடைந்துவிடும் என்று பலரும் நம்புகின்றனர். மேலும் இந்த வைத்தியத்திற்கு வருபவர்களுக்கு சிறப்பு ரயில்களும், கூட்டத்தை கட்டுபடுத்த பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

F1 F2