இந்திய கணவனைத் தேடி மகனுடன் இந்தியாவிற்கு சென்ற வங்கதேசப் பெண்!!

255

பாகிஸ்தானில்..

காதலனுக்காக பாகிஸ்தானில் இருந்து நொய்டா வந்த சீமா ஹைதர் சம்பவம் நடப்பதற்கு பின், மற்றொரு வங்கதேச பெண் இந்திய கணவனைத் தேடி தனது மகனுடன் நொய்டாவுக்கு வந்துள்ளார்.



வங்கதேசத்தைச் சேர்ந்த சோனியா அக்தர் என்ற அந்தப் பெண் தனது மகனுடன் நொய்டாவுக்கு வந்தார். நொய்டாவில் வசிக்கும் சவுரவ் காந்த் திவாரி தன்னை வங்கதேசத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் சோனியா கூறினார்.

திவாரி வங்கதேசத்தில் பணிபுரியும் போது தாங்கள் காதலித்து இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக சோனியா கூறினார். தனது கர்ப்பத்திற்குப் பிறகு, இஸ்லாம் மதத்திற்கு மாறிய திவாரி, முக்கியமான வேலையை முடித்துவிட்டுத் திரும்புவதாக உறுதியளித்து இந்தியா வந்தார்.

திவாரி திரும்பி வராததால், சோனியா அவரிடம் செல்போன் மூலம் பேச முயன்று தோல்வியடைந்தார். இந்நிலையில், சீமா ஹைதரின் சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட சோனியா அக்தர் விசா உதவியுடன் இந்தியா வர முடிவு செய்தார்.

சோனியா அக்தர் நொய்டாவை அடைந்தவுடன், பொலிஸார் அவரை காவலில் எடுத்து, செக்டார்-62ல் உள்ள தடுப்பு மையத்தில் தங்க வைத்தனர். பின்னர், நொய்டா காவல் ஆணையரகத்தின் மகளிர் பிரிவு திவாரிக்கும் சோனியாவுக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றும் பலனில்லை.

தனது கணவர் தன்னுடன் வங்கதேசத்திற்கு திரும்பி வர வேண்டும், இல்லையெனில் திவாரியுடன் இந்தியாவில் தங்குவேன் என்று சோனியா கூறுகிறார். மொத்தத்தில் காதலர்களுக்காக வெளிநாட்டு பெண்கள் இந்தியாவுக்கு வருவது விவாதப் பொருளாகியுள்ளது.