அமெரிக்கர்களை திகைப்பில் ஆழ்த்திய இந்திய சிறுவன்!!

672

BOY

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் இந்திய சிறுவன் ஒருவன் அரிய சாதனை படைத்து அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

சாக்ரமெண்டோ என்ற இடத்தில் வசிக்கும், பவர் தானிஷ்க் ஆபிரகாம் என்ற பத்து வயது சிறுவன், தனது மொத்த பள்ளிப்படிப்பையும் டிப்ளமோ பெற்று சாதனை படைத்துள்ளான்.

இச்சிறுவன் நிகழ்த்தியுள்ள இந்த சாதனை அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது குறித்து தானிஷ்க் கூறுகையில், இது எளிதான ஒன்றல்ல, நான் இதற்காக கடுமையாக முயற்சி செய்தேன்.

அதன் பலனாக கடைசியில் நான் உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
மேலும் நான் அடுத்து சமுதாயக் கல்லூரியில் சேர்ந்து படிப்பேன்.

அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பை முடித்து, எதிர்காலத்தில் விஞ்ஞானி அல்லது மருத்துவராக ஆசைப்படுவதாகவும், மேலும், பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.