வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற புதிய தொழில் நுட்ப (BIO TEC) கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு!!(படங்கள்)

660

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று (12.06) தொழில் நுட்ப (BIO TEC) கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் அவர்களால் அடிக்கல் நாட்டபட்டது.

நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு ஜனாதிபதியின் வவுனியா இணைப்பாளர் சிவநாதன் கிஷோர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஜெயசந்திரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவகுமார் (ரகு) உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொழில் நுட்பபீட பல்கலைகழக மாவர்களின் நலன்கருதி அமையவிருக்கும் இக் கட்டிடமானது 3 மாடிகளைக் கொண்டதாகவும் 250 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ள இக்கட்டத்திற்கு 350 இலட்சம் ரூபா செலவில் தொழல்நுட்ப சாதனங்களும் உகரணங்களும் பொருத்தப்படவுள்ளதாக நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் குறிப்பிட்டார்

வவுனியா மாவட்டத்தில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளும் BIO TEC பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

-பண்டிதர்-

1 2 3 4 5 6