செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர். இவருடைய மனைவி தாரணி . இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதில் சுந்தர் கூலிப்பணி செய்து வருகிறார்.
இதில் செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் மல்ரோசாபுரம் பகுதியில் சுதீன் , சுந்தர் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் சுதீன் சுந்தரின் வீட்டிற்கு அடிக்கடி வருவதும் வாடிக்கை தான். இந்நிலையில் சுந்தரின் மனைவி தாரணியிடமும் சுதீன் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளனர்.சில நாட்களில் தாரணியின் கணவர் சுந்தருக்கு இருவரின் கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்தது இதனை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். கணவரின் பேச்சை கேட்டு சுதீன் உடனான தொடர்பையும் தாரணி துண்டித்துள்ளார்.
இந்நிலையில் தாரணி சுந்தரின் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு இருந்தார். அப்போது சுதீன் என்னிடம் ஏன் வழக்கம் போல பேசுவது கிடையாது, என்னை விட்டு ஏன் விலகி செல்கிறாய் என கூறி விவாதம் செய்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள்மனையை கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தாரணியின் மார்பு,வயிறு,கழுத்து பாகங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
தாரணி அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார். தாரணியை ஆத்திரம் தீர கொலை செய்த சுதீன் மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு தானே நேரில் சென்று ஆஜரானார்.
கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாரணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அத்துடன் அவர் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனின் மனைவியை நண்பனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.