ராஜஸ்தானில்..
கஜுராஹோ எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் 22 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாக மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்த வயது இருக்கும் நபர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்று இல்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல் வருகிறது. இது போன்ற சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோகர் பகுதியில் வசித்து வந்த அக்ஷய் என்ற 22 வயது இளைஞர் ராமேஸ்வரத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஊர் திரும்பும் போது இந்த துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பகவத் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அக்ஷய் மற்றும் சித்தோகர் பகுதியை சேர்ந்த மேலும் பலர் ராஜஸ்தானில் இருந்து கிளம்பியுள்ளனர்.
சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடித்த பிறகு, அங்கிருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப அக்ஷய் மற்றும் அவருடன் வந்த குழுவினர் கஜூராஹோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளனர்.
அப்போது ரயில் சித்தோர்கரை அடைவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடும்பத்தினர் ரயிலில் இருந்து இறங்குவதற்காக தங்கள் பொருட்களைக் கட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது அக்ஷய் கங்ரார் ரயில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து கீழே விழுந்தார். நீண்ட நேரமாகியும் அக்ஷய் திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து கழிவறைக்கு சென்று பார்த்தனர். அங்கு கழிவறை மூடப்பட்டு இருந்துள்ளது. அவர்கள் கதவை தட்டிஅழைத்தபோது உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதற்கிடையில், ரயில் அதிகாலை 4.05 மணிக்கு சித்தூர்கர் சந்திப்புக்கு வந்தபோது, குடும்பத்தினர் இது குறித்து ஜிஆர்பிக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று கழிவறை கதவை உடைத்து பார்த்தபோது, அக்ஷய் கீழே விழுந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்ஷய் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக தெரிவித்தனர், பிரேத பரிசோதனைக்கு பின், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவம் படிக்க விரும்பிய அக்ஷய் அடுத்த மாதம் செர்பியாவுக்கு சென்று மருத்துவ படிப்பை தொடர இருந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.