கிளிநொச்சியில்..
கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற இடம்பெற்ற பூப்புனித நீராட்டுவிழா சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.பொதுவாக பெண்கள் பூப்பெய்தும் விழாவை மிக சிறப்பாக செய்வது நமது பாரம்பரியத்தில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓர் சம்பிரதாயமாகும்.
வசதிபடைத்தவர்கள் மிக கோலகலமாக மஞ்சள் நீராட்டுவிழா சடங்கை கொண்டாடுவார்கள். வசதி குறைந்தவர்கள் தமது வாழ்வியல் நிலைக்கேற்ப பூப்புனித நீராட்டுவிழா சடங்கை கொண்டாடுவார்கள்.
அந்தவகையில் உறவுகள் புடை சுழ மங்கள் வாத்தியங்களுடன் பூப்படைந்த பெண்ணை ஏ9 வீதியூடாக பல்லக்கில் சுமந்து வந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் வியக்கவைத்துள்ளது.