கணவன் வேண்டாம்.. பழைய காதலனுடன் சென்ற பெண் எடுத்த விபரீத முடிவு!!

721

கூடுவாஞ்சேரியில்..

கூடுவாஞ்சேரி அருகே கணவனை விட்டு பிரிந்து காதலனுடன் வசித்து வந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவர் பொத்தேரி அடுத்த தைலாவரம் பகுதியில் கேபிள் ஆப்ரேட்டர் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், இவரது நிறுவனத்தில் வேலை செய்த தமிழ்வாணன் என்பவரும் மூத்த மகளான பவித்ராவும், (24) காதல் வயப்பட்ட நிலையில், கோவிந்தராஜ் சென்ணை வண்ணாரப்பேட்டையை சார்ந்த புருஷோத்தமன் என்பவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் பவித்ரா மற்றும் தமிழ்வாணன் ஆகிய இருவரும் சென்போனில் பேசிக்கொண்டு பழைய காதலை தொடர்ந்த நிலையில் பவித்ரா மற்றும் அவரது கணவர் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு, பவித்ரா தனது கணவர் புருசோத்தமனை விட்டு குழந்தையுடன் பிரிந்து தனது பழைய காதலன் தமிழ்வாணனுடன் பொத்தேரி அடுத்த தைலாவரம் பகுதியிலுள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பவித்ராவின் உடலை கைப்பற்றிய கூடுவாஞ்சேரி போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.