இனி சொந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வரி வசூலிக்க அரசாங்கம் முடிவு!!

862

கொழும்பில்..

முக்கியமான நகரங்களில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வீடு வாங்கியவர்கள் மற்றும் அதிசொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அந்தத் தீர்மானத்திற்கமைய, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.என்.ஏ.விஜேசூரிய அண்மையில் வீட்டு வளாக நிர்வாக நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வரி வருமானம் மிகவும் முக்கியமானதாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனால் பிரதான நகரங்களில் வீடுகளை வாங்கி தற்போது அந்த வீடுகளில் வசிக்கும் அனைத்து நபர்களின் விவரங்களையும் வழங்குமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளரின் எழுத்துமூல உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 123(1) பிரிவின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த எழுத்துமூலக் கோரிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.