கணவன் மனைவி விபரீத முடிவு.. போலிசார் தீவிர விசாரணை.!!

424


தேனியில்..தேனியில் திருமணமாகி 5 ஆண்டுகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அபிபட்டியில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது30). இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 24).
எலக்ட்ரிஷன் வேலை செய்து வரும் இவருக்குத் திருமணம் ஆகி 5 ஆண்டு ஆகி உள்ள நிலையில், இரண்டு வயதில் ஒரு பையனும், நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.மேலும், பிரபாகரன் வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல் வீட்டிற்கு வந்துள்ளார்.


இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 27) இரவு கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து உறவினர்கள் வந்து பார்த்த பொழுது, பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதும், அவரது மனைவியும் சடலமாக கிடந்ததும்

அதனைத்தொடர்ந்து, காவல் துறையினருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓடைப்பட்டி காவல்துறையினர், கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


மேலும், கணவன் மனைவிக்குள் ஏதேனும் சண்டையா அல்லது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ஏதேனும் சண்டையா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.மேலும், இருவரின் செல்போனை கைப்பற்றி ஏதாவது தடயங்கள் கிடைக்குமா எனத் தீவிரமாக விசாரித்து வருகின்றன.

அபிபட்டி பகுதியில் இந்த செய்தி பெரும் பரபரப்பையும், துக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உத்தமபாளையம் டிஎஸ்பி மதுக்குமாரி, காவல் ஆய்வாளர் சிலைமணி நேரடியாக வந்து இறப்புக்கான காரணம் என்ன என்று தீவிரமாக விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், காவல்துறையினர் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிரேதப் பரிசோதனைக்கு பிறகே எதற்காக இறந்தார்கள் என்பது தெரிய வரும் எனவும் தற்கொலைக்கு வேறு காரணம் இருக்குமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.