இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்வு!!

979

எயிட்ஸ்..

இலங்கையில் 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த 2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.



இந்த விபரங்களை தேசிய எஸ்டிடி – எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ளது. இரண்டாவது காலாண்டு பகுதியில் 181 புதிய எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 26 ஆண்களும் 3 பெண்களும் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் .ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை இதேகாலாண்டு பகுதியில் எயிட்சினால் 13 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.