ராஜகுமாரி மரணம் : பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!!

985

கொழும்பில்..

காவலில் வைக்கப்பட்டிருந்தபோது வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரி மரணமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் இன்று செவ்வாய்க்கிழமை (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பதுளையைச் சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி, தனது தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறி, அவரது எஜமானரும் பிரபல தயாரிப்பாளருமான சுதர்மா நெத்திகுமார செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மே 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.அதன் பின்னர் வெலிக்கடை பொலிஸாரின் தடுப்பிலிருந்தபோது ராஜகுமாரி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.