போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 14 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிகப்பு எச்சரிக்கை!!

718

Interpol

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் 14 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பொலிஸார் சிகப்பு எச்சரிக்கை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இவர்களில் இருவர் இந்திய பொலிஸாரினால் தேடப்பட்டு வருபவர்கள்.

சுனில் காமினி, பொன்சேகா, சின்னய்யா குணசேகரன், டி.சண்முகம், சூரி, கலைமகன், வின்சன்ட் வில்சன், ஈஸ்வரன், பாலமுரளிகிருஸ்ணா, செல்வநாயகம், ருத்ரகுமாரன், யசோ தேவன், கண்ணன் உகாலன் மற்றும் சரிகுணபாலன் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வர்த்தகர்களில் ஆறு பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து மன்னாரிலிருந்து புத்தளம் வரையில் போதைப்பொருள் தருவிக்கப்படுகின்றது.

சிகப்பு எச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிலர் மட்டக்குளி, ஜம்பட்டா வீதி மற்றும் கதிரேசன் வீதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.