
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாசிவன்தீவு முகத்துவாரக் கடலில் குளித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பன்சல இரண்டாம் குறுக்கு வீதியில் வசித்து வரும் அபூபக்கர் முகம்மது அன்சார் (வயது 17) என்ற இளைஞனே இவ்வாறு கடலில் மூழ்கி பலியானவராவார்.
இவர் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் தனது குடும்பத்தாருடன் நாசிவன்தீவு முகத்துவாரம் கடலுக்கு சென்று குளித்துக் கொண்டிருந்த போதே பிற்பகல் 05.45 மணியளவில் கடலில் மூழ்கியுள்ளார்.
இவரை உடன் மீட்ட குடும்ப உறவினர்கள் விரைவாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





