இலங்கை வந்த விமானத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல்!!

1274


கட்டாரில்..கட்டாரில் இருந்து வந்த விமானப் பயணி ஒருவரின் பயணப் பொதிகளை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண்ணை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இவர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 5 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட வீட்டு பணிப்பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர் கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற நிலையில் அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
பாதிக்கப்பட்ட குறித்த பயணியும் இந்த பெண்ணும் ஒரே விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.விமானத்திலேயே குறித்த பயணியின் பயணப் பொதிகளை அந்த திருடிச் சென்றுள்ளார்.


பாதுகாப்பு கமராக்கள் சோதனை செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் சூட்கேஸ்சுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகளை திருடி அடகு வைத்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.