வவுனியாவில் காணாமல் போன மாணவன் கண்கள், கைகள் கட்டடப்பட நிலையில் வீடு திரும்பினார்!!

294

vavuniya student

வவுனியா நகர்ப் பகுதியில் வைத்து கடந்த 27ம் திகதி காணாமல் போன கல்மடு கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் ரஜீவன் என்ற மாணவன் நேற்று (13.06) இரவு வீடு திரும்பியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..

கடந்த 27ம் திகதி வவுனியா பகுதியில் மரக்கரி விற்பனை செய்வதற்காக வந்திருந்தபோது காணாமல் போயிருந்தார். இதனையடுத்து மனித உரிமை ஆணைக்குழு, வவனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடு செய்திருந்தோம்.

இந் நிலையில் நேற்று இரவு கைகள் கட்டப்பட்டு மிகவும் சோர்வான நிலையில் எமது மகன் இனந்தெரியாதோரால் எமது வீட்டிற்கு அருகாமையில் கொண்ட வந்து விடப்பட்டதாக தெரிவித்தனர்.

உடலும் உள்ளமும் சோர்ந்த நிலையில் நடக்க முடியாத நிலையில் வீட்டிற்குள் வந்த அந்த மாணவன் தாயாரின் தோளில் மயங்கிச் சரிந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் பெற்றோர் அவரை வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வவனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி மு.அகிலேந்திரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக தெரிவித்து மாணவன் ஒருவன் எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து தற்போது 14 ஆம் விடுதியில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவரது உடற்பகுதியில் அடி காயங்களோ துன்புறுத்தலுக்கான சான்றுகளோ இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே விபத்து பிரிவில் அனுமதிக்கப்படாது 14 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

இவ் விடயம் தொடாபாக வவுனியா பொலிஸாரும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.