கொட்டும் மழையில் பிறந்து சிலமணிநேரமே ஆன சிசுவை வீசிக் கொன்ற தாய் கைது!!

849

baby

பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை கொட்டும் மழையில் வீசி விட்டுச் சென்ற தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிலிப்பன்ஸ் தலைநகர் மணிலா அருகேயுள்ள கலூகன் நகரில் தொப்புள் கொடியுடன் ஒரு சிசு சாலையோரம் மழையில் நனைந்தபடி அழுதுக் கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

அவர்கள் வந்து சேருவதற்குள் அழுதழுது சோர்ந்திருந்த அந்த குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. இந்த கொடூர செயலை செய்த பெண்ணை தேடி அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொலிசார் சோதனை நடத்திய போது, ஆடைகளில் இரத்தக் கறையுடன் ஒரு பெண் பிடிபட்டார்.

அவருக்கு சில மணி நேரத்துக்கு முன்னர் பிரசவம் நடந்திருக்கலாம் என்று உடன் வந்திருந்த பெண் பொலிசார் சந்தேகித்தனர். தனக்கும், இறந்துக் கிடந்த குழந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதலில் கூறி வந்த அவர், பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்த பொலிசார், பிறந்த சிசுவைக் கொலை செய்த குற்றத்துக்காக வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.