இலங்கையில் விடுதியில் காதலியுடன் தங்கியிருந்த நபருக்கு நேர்ந்த சோகம்!!

2283

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தனது கள்ளக்காதலியுடன் விடுதிக்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அன்று மதியம் ஒரு மணியளவில் அவர் விடுதியில் திடீரென விழுந்துள்ள நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி இது திடீர் மாரடைப்பு காரணமாக ஏற்பட்ட மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.