15ஆவது வயதில் முழு பார்வையையும் இழக்கும் அபாயம் : சிறுவனொருவனுக்கு நேர்ந்த சோகம்!!

946

மாத்தறையில்..

மாத்தறை பகுதியில் சிறுவன் ஒருவர் நாளுக்கு நாள் பார்வை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாத்தறை உருகமுவ, இஹலகொட கனிஷ்ட பாடசாலையில் 04ஆம் தரத்தில் கல்வி கற்கும் பஹன்சித என்ற மாணவனே இவ்வாறு நாளுக்கு நாள் பார்வையிழந்து வருவதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மாணவன் தனது 15 ஆவது வயதில் முழுமையாக கண் பார்வை​யை இழக்க நேரிடும் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது மகனுக்கு சிகிச்சை அளித்து, அவரின் கண் பார்வையை குணப்படுத்த மருத்துவர்கள் முன்வர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.