நீங்கள் நூடுல்ஸ் பிரியரா : இந்த புகைப்படங்களை கொஞ்சம் பாருங்கள்!!

622

சீனாவில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் நூடுல்ஸ் தொழிற்சாலையின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உலக மக்களை கவர்ந்த உணவு வகைகளில் ஒன்றான நூடுல்ஸ், சீனாவை தலைமையகமாய் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இவை சுகாதாரமில்லாமல் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது என தற்போது தெரியவந்துள்ளது.

சீனாவின் உள்ள டாங்செங் நூடுல்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏராளமான நூடுல்ஸ் தயார் செய்து அவற்றை பேக்கிங் செய்வதற்காக அறை ஒன்றில் குவித்து வைக்கின்றனர்.

அந்த அறைக்கு செல்லும் அந்நிறுவன ஊழியர்கள் வெறுங்கால்களில் அவற்றை மதித்தப்படியே செல்கின்றனர்.
மேலும் தொழிலாளர் குவிக்கப்பட்ட நூடுல்ஸின் மீது படுத்து உறங்கியும் உள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானதால், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள நூடுல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருக்கு குறைந்தது பத்து வருட சிறைதண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

N2

N1 N3