வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி கவிப்பிரியா கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம்!!

4938


கவிப்பிரியா…க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04.09.2023) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி ராமகுமார் கவிப்பிரியா கலைப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.இம் மாணவி கலைப்பிரிவில் விவசாய விஞ்ஞானம் , புவியியல் , தமிழ் ஆகிய பாடங்களில் 3A சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் எஸ் பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 194வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவ் மாணவிக்கு வவுனியா நெற் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் உங்களது பாடசாலை மாணவர்களின் சித்திகளை எமது இணையத்தில் பிரசுரிக்க விரும்பினால் எமது முகநூல் பக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.