தொழிலில் நஷ்டமடைந்ததால் தாயை கொலைசெய்த பாசக்கார மகன்!!

580

Murder

ஈரோடு மாவட்டத்தில் நபர் ஒருவர் தொழிலில் நஷ்டமடைந்ததால் தன் தாயை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42) என்ற நபர் தன் மனைவி வனிதா(32) கவிப்பிரியா(8), செல்வகுமார்(4) என 2 குழந்தைகள், தந்தை முத்துச்சாமி மற்றும் தாய் காளியம்மாள்(70) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

கார் தரகராக வேலை பார்த்து வந்த இவர் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தன்னிடம் இருந்த மூன்று கார்களை விற்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வனிதா சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்கையில் ஆறுமுகத்தையும் அழைத்துள்ளார்.ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

இதன்பின் தன் அண்ணன் வீட்டிற்கு சென்று வந்த ஆறுமுகம், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

மேலும் தான் இறந்துபோனால் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மிகவும் சிரமப்படுவார் என கருதிய ஆறுமுகம் வீட்டை தாழிட்டு, தாயின் கழுத்தை அறிவாளால் வேட்டியதுடன், தானும் தூக்கு போட்டு தொங்கியுள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த வனிதா இக்காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போயியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக தற்போது வீரப்பன்சத்திரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.