வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் 05 வயது யானை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று (04.09) தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியிலே மாடு மேய்க்கச் சென்ற கிராமவாசி ஒருவர் புதையுண்ட நிலையில் யானை ஒன்று உயிருக்கு போராடுவதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து மாமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் யானையினை மீட்பதற்கான நடவடிக்கையினை வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார், மற்றும் கிராமமக்கள் இணைந்து முன்னெடுத்ததுடன், யானை மீட்கப்பட்டு பாதுகாப்பாக காட்டுக்கு அனுப்பபட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
கடும் வெப்பம் காரணமாக நீர் அருந்த வந்த யானையே நீரேந்துப்பகுதியில் புதைந்து இருக்கலாம் எனவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.