சாக்கு மூட்டையில் கிடந்த இளம் பெண்ணின் சடலம்.. 5 நாட்களுக்குப் பின்னர் 80 கி.மீ தாண்டி சிக்கிய காதலன்!!

729


கோவாவில்..கோவாவில் இருந்து 80 கி.மீ தூரத்தில் இருக்கும் மகாராஷ்டிராவின் அம்போலி காட் என்ற பகுதி உள்ளது. இங்கிருக்கும் காட்டுப்பகுதி ஒன்றில் சாக்குமூட்டை கிடந்துள்ளது.இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் அதனை திறந்து பார்த்ததில், அதில் இளம்பெண் ஒருவரது சடலம் இருந்துள்ளது.
இதையடுத்து அதனை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி தங்கள் விசாரணையை தொடங்கினர். அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சி உள்ளிட்டவையை ஆய்வு செய்து விசாரிக்கையில் சந்தேகத்திற்குரிய வகையில் இளைஞர் ஒருவர் சென்றது தெரியவந்தது.


தொடர்ந்து அதனை வைத்து விசாரித்ததில் கோவாவில் இருக்கும் போர்வோரி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் சுஞ்சவாட் (22) என்பவர் பிடிபட்டார். அவரிடம் இதுகுறித்து விசாரிக்கையில் ஆரம்பத்தில் இதனை தெரியாதது போல் பதிலளித்து வந்த அவர், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அதன்படி தனது காதலி தன்னை பிரேக் அப் செய்துவிட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். அதாவது சாக்குமூட்டையில் கிடந்த பெண்ணின் பெயர் காமாட்சி (30). அந்த பெண்ணும் பிரகாஷும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.


இந்த சூழலில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அந்த பெண் இவரை பிரேக் அப் செய்துள்ளார். மேலும் இவரது மொபைல் எண்ணையும் பிளாக் செய்துள்ளார்.

எனவே காதலன் பிரகாஷ், காமாட்சியிடம் பலமுறை பேச முயன்றும் அது பலனளிக்காமல் போனது. தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், காமாட்சி போலிசில் புகார் அளித்துள்ளார்.

எனவே கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி காமாட்சியை சந்திக்க வேண்டும் என்று தனியே அழைத்துள்ளார். ஆரம்பத்தில் மறுத்த அவர், இதுவே கடைசி என்பதால் பிரகாஷை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியை குத்தி கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காமாட்சியின் சடலத்தை மறைக்க தனது நண்பரின் உதவியோடு 80 கி.மீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் வீசி சென்றுள்ளார்.

இவையனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்போது காதலன் பிரகாஷ் சுஞ்சவாட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.