திருமண வைபவத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர் பலியான சோகம்!!

2904

களுத்துறையில்..

திருமண வைபவத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இடம்பெற்ற விபத்தில் வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சுகத் தயானந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



உயிரிழந்தவர் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது, ​​களுத்துறையிலிருந்து வஸ்கடுவ, வாடியமங்கட சந்திக்கு அருகில் வந்த பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி அதன் பயணிகளுக்கு முன்னால் சில மீற்றர் தூரம் இழுத்துச் சென்றதாகவும், பலத்த காயமடைந்த நபர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.