பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் : பெண் செய்த மோசமான செயல்!!

1837

கம்பஹாவில்..

கம்பஹாவில் பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் மூலம் ஆப்பிள் கையடக்க தொலைபேசி வாங்க வந்த இளம்பெண் ஒருவர் அதை சோதனை செய்வதாக கூறி அதனை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் உடுகம்பலை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்களுக்கு விரிவுரைகள் வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆப்பிள் கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.முறைப்பாட்டாளர் தனது கையடக்க தொலைபேசியை விற்க பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்த குறித்த பெண் அதனை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.அதற்கமைய, கம்பஹாவிலுள்ள தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் கிளைக்கு அதனை கொள்வனவு செய்வதற்காக நேற்று முன்தினம் வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.