யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : கவலை வெளியிட்ட சிறுமியின் தாத்தா!!

987

யாழில்..

யாழில் 08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பில் சிறுமியின் தாத்தா சுப்பையா கனக நாயகம் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டிருந்தது சரவணபவன் வைத்தியர் மூலம் மருந்துகளை பெற்றுக் கொண்டோம் மருந்துகளை எடுத்தும் தொடர்ந்தும் காய்ச்சல் இருந்ததால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விடுதியில் வைத்திருந்தோம்.

அங்கு இருக்கின்ற தாதியர்கள் எனது பேத்திக்கு கையில் ஊசி மருந்து செலுத்துவதற்கான ஊசியை ஏற்றி இருந்த போது எந்த தப்பும் நடந்ததாக அப்போது எங்களுக்கு தெரியவில்லை,