தேனியில்..
தேனி மாவட்டம் பெரியகுளம் பங்களாப்பட்டி, பெரியார் காலனியில் வசித்து வருபவர்கள் அரவிந்த். இவருடைய மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள். அரவிந்த், அதே பகுதியில் உள்ள நஞ்சாவரம் கண்மாய் மாட்டுக் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், மாடுகளுக்கு தீவனம் வைப்பதில் இரவு வரை திரும்பாததால் மனைவி பதட்டம் அடைந்தார். அரவிந்தின் அக்கா கணவர் செந்தில்குமார். அவரையும் அழைத்து கொண்டு அரவிந்தை தேடி மாட்டு கொட்டகைக்கு சென்றார். மாட்டு கொட்டகைக்கு சென்றதும் இருவரும் தனித்தனியாக பிரிந்துச் சென்று அரவிந்த்தை தேடினார்கள்.
செந்தில்குமார் கொட்டகை முழுவதும் தேடிப் பார்த்து விட்டு வந்த போது, உடன் வந்த ஹேமாவதியை காணவில்லை. இதனால் பதட்டம் அடைந்து மொபைல் மூலம் தனது உறவினா்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். அனைவரும் சேர்ந்து மாட்டு கொட்டகை அருகே உள்ள பகுதியில் தேடினர்.
அப்போது மாட்டு கொட்டகைக்கு அருகே உள்ள சகதியில் அரவிந்த், அவரது மனைவி ஹேமாவதி ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர். இதைப் பாா்த்ததும் பதறிப்போன செந்தில்குமார் அவர்களை தூக்க முற்பட்டார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கு சகதியில் அறுந்து கிடந்த மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக மின் இணைப்பை துண்டித்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானார் . அரவிந்த், ஹேமாவதி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர விசாரணையில் மாடுகள் கொட்டகையை விட்டு வெளியேறாமல் இருக்க கம்பிகளால் போடப்பட்டுள்ள வேலியில் மின்வயர் அறுந்து கிடந்துள்ளது. அதை கவனிக்காத அரவிந்த் அந்த வயரை மிதித்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
கணவரை தேடிச்சென்ற போது, அவர் உயிரிழந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சியில் ஹேமாவதி அவரை தூக்கச் சென்றுள்ளனர். அப்போது ஹேமாவதி மீதும் மின்சாரம் பாய்ந்து, அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.