வவுனியா வடக்கு கல்வி வலய மாணவி வடமாகாண ஆங்கில தினப் போட்டியில் முதல் முறையாக முதலிடம்!!

2876

வடக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியில் முதல் முறையாக வவுனியா வடக்கு வலய மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆங்கில தினப் போட்டிகள் நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று (04.09) வெளியாகின.

அதில், ஆங்கில கட்டுரை எழுதுதல் போட்டியில் வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த புதுக்குளம் மாகவித்தியாலய தரம் 12 மாணவி கி.கிருசாளினி மாகாணத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு வலய மாணவி ஒருவர் ஆங்கில தினப் போட்டி ஒன்றில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.