முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!!

1632

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் முல்லைத்தீவு நோக்கி பயணித்த முள்ளியாவெளியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகியோர்,

ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.