இலங்கையில் 21 வயதான இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!!

1139

இலங்கையில்..

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்றையதினம் (05-09-2023) மாலை ஆணைதீவு பகுதியில் இடம்பெற்றதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று – இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான சந்திரராஜா கஜேந்திரராஜா என பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த இளைஞன் வெருகல் பகுதியிலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .