திருமணமாகி 4 மாதத்தில் நேர்ந்த சோகம்.. மனைவியின் கழுத்தை அறுத்து கொலை : கணவரும் விபத்தில் பலி!!

474

தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தின் அதிலாபாத் பங்கர்குடா பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் . இவருக்கும் தீபாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி உள்ளது. திருமணம் முடிந்து இருவரும் அருண் வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அருணுக்கு அவரது மனைவி தீபா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தன்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை காதலிப்பாரோ என தினம் தினம் சந்தேகப்பட தொடங்கினார். இதனால் மேலும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. தீபா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.

இந்த சம்பவம் குறித்து தீபா தனது பெற்றோருக்கு தெரிவித்து அழுதபோது எல்லாம், அவர்கள் தீபாவை சமாதான படுத்தி வந்துள்ளனர். இதனால் அருண் மேலும் தீபாவை சித்திரவதை செய்துள்ளார்.

பெற்றோர் வீட்டுக்கு சென்ற தீபாவை 1 வாரத்திற்கு பிறகு அருணின் தாயார் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தார். அருணின் கொடுமைகள் நின்றபாடில்லை. கணவன் – மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த அருண், தனது மனைவி தீபாவை அடித்து சுவற்றில் மோதியுள்ளார். இதனால் தீபா மயங்கி சரிந்தார். ஆத்திரம் அடங்காத அருண், வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தீபாவை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

இதன் பிறகு போலீசில் சரணடைய பைக்கில் சென்றார். அப்போது வேகமாக சென்ற அவர் எதிரே வந்த லாரி ஒன்றில் மோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த அருண், மனைவி தீபா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை கொலை செய்து போலீசில் சரணடைய சென்றபோது விபத்தில் சிக்கி கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.