யாழ் சுதுமலை கொலையுடன் தொடர்புடைய ஐவர் கைது!!

864

A6

யாழ். சுதுமலை பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த கொள்ளை குழு வீட்டில் இருந்த இரு வயோதிப பெண்ணின் கைகள் மற்றும் வாய் என்பவற்றை கட்டிவிட்டு அவர்களின் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.

வாய்கள் இறுக்க கட்டப்பட்டதால் வீட்டின் உரிமையாளரான குமாரலிங்கம் பத்மாவதி (57) என்பவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரால் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வீட்டில் இருந்த மற்றைய வயோதிபப் பெண்ணின் மகன் உட்பட ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் தொடர் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.