பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழந்த சோகம்!!

855


களனியில்..



களனி பல்கலைக்கழக மாணவரொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு (07.09.2023) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்து குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதென கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும்,




கரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் அகில இந்திரசேன (22 வயது) என்ற மாணவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.