வெளிநாடொன்றில் அசத்தும் இலங்கையர்: குவியும் பாராட்டுக்கள்!!

775


துபாயில்..துபாயில் இலங்கையரொருவர் மைனஸ் டிகிரி செல்சியஸில் குளிரூட்டப்பட்ட ஐஸ் சிற்பங்களை வடிவமைத்து பலரது பாராட்டுக்களை பெற்று வருகின்றார்.இலங்கையை பூர்வீகமாக கொண்ட மார்க் ரணசிங்கே என்பவரே இவ்வாறு பாராட்டுக்களை பெற்று வருகின்றார். விசேட நிகழ்ச்சிகளில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் ஐஸ் சிற்பங்களை, துபாயில் உள்ள தனது ஸ்டூடியோவில் வைத்து வடிவமைத்து கொடுத்து வருகின்றார்.
மைனஸ் டிகிரியில் குளிரூட்டப்பட்ட அறையில் குளிர்கால ஆடைகள் அணிந்தபடி அவர் ஐஸ் சிற்பம் வடிப்பதை காண பலரும் ஆர்வமுடன் அவரது ஸ்டூடியோவிற்கு படையெடுப்பதாகவும் கூறப்படுகின்றது.