நடிகர் சிவகார்த்திகேயனை நெகிழ்ச்சியடைந்த செய்த திருகோணமலை தமிழ் இளைஞன்!!

896

திருகோணமலையில்..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக வந்து தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வந்துகொண்டிருக்கிறார்.இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டொக்டர், டான், மாவீரன் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில், இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு பரிசை கொடுத்துள்ளார்.

இலங்கையில் திருகோணமலையை சேர்ந்த குறித்த இளைஞன் சென்னைக்கு வருகை தந்து நடிகர் சிவகார்த்திகேயன் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் ஓவியம் ஒன்றை கொடுத்துள்ளார்.

குறித்த ஒவியத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை அவரின் ஆண் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போலவும், மேலும் அம்மா, மனைவி பெண் குழந்தை ஆராதனா என குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை ஓவியமாக வரைந்து அவரிடம் கொடுத்துள்ளார்.

இவ்வாறான நிலையில், இளைஞனுக்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தனது பாராட்டுக்களை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியது,”தம்பி உங்கள் ஓவியத்தை பார்த்தேன் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது, உங்களுக்கு என் அன்பும், பாராட்டுக்களும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.