யாழிலிருந்து தமிழகத்திற்கு சென்று பொலிஸில் தஞ்மடைந்த தமிழ் இளைஞன்!!

858

யாழில்..

யாழிலிருந்து படகுமூலம் இந்தியாவுக்கு சென்ற நபரொருவர் தான் அகதி எனக்கூறி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.யாழ். கட்டப்பிராய் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரே மேற்படி படகு மூலம் தனுஷ்கோடியில் இறங்கி அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று, தான் அகதியாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் எப்போது வந்தாய் எப்படி வந்தாய் என்ன விசாரணை தொடங்கினர், பின்னர் மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியிருந்தனர்.

குறித்த விசாரணையில், குறித்த நபர் நேற்றைய தினம் (08.09.23) இரவு 11.30 மணியளவில் தலைமன்னார் கிராமத்திலிருந்து படகு மூலம் 100,000 ரூபா செலுத்தி இன்று (09-09-2023) காலை 04.30 மணியளவில் இராமேஸ்வரம் கோரண்டராமர் கடற்கரை அருகில் வந்து கரை இறங்கியுள்ளார்.

மேற்படி நபரை விசாரணை செய்ததில் குறித்த நபரின், தாய் தந்தையர் 1990 ஆம் ஆண்டு தமிழகம் வந்து வேலூர் மாவட்டம் மேல்மானேவர் அகதிகள் முகாமில் வசித்து வந்ததாகவும் 1996 ஆம் ஆண்டு தான் பிறந்ததாகவும்,10 ஆம் வகுப்பு வரை குணவட்டம் அரசு மேல்நிலைப் பாடசாலையில் பயின்று பின்பு பெயின்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.பின்பு இலங்கை கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் வந்துள்ளார்.

குறித்த நபரின் அப்பா சங்கர் 2004 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்ததாகவும் அம்மா புஷ்பலதா தம்பி பிரவின் ஆகியோர் வேலூர் மாவட்டம் மேல் மானேவர் அகதிகள் முகாமில் வசித்து வருவதாகவும் அவர்களை பார்க்க தமிழகம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து மேலதிக விசாரணை மேற்கொண்டு அவர் அகதி தான் என்று உறுதிப்படுத்திய பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்படவுள்ளார்.