சாதனையில் முன்னேறும் சங்ககார!!

235

Sanga1 Sanga2

இலங்கை, இங்கிலாந்து அணிகள் தங்கள் முதல் டெஸ்ட் போட்டியை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 575 ஓட்டங்கள் குவித்தது. இதில் ரூட் அதிகபட்சமாக இரட்டை சதம் விளாசினார்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி அணி, 2வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 3வது நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சங்ககார தனது 36வது சதத்தை அடித்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ராகுல் டிராவிட்டை அவர் சமன் செய்தார். இவர் 147 ஓட்டங்கள் (258 பந்து, 16 நான்கு ஓட்டங்கள்) எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

3ம் நாள் ஆட முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 415 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அஞ்சலோ மத்யுஸ் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.