கிணற்றில் குதித்து தற்கொலை செய்த இளம் பெண்.. தாய் கண்டித்ததால் விபரீதம்!!

545


திருப்பூரில்..திருப்பூர் மாவட்டம் பாரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் விஜி . இவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் இருந்து வரும் நிலையில் அதே பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.விஜி கடந்த ஒரு ஆண்டாக விஜி அதே பகுதியில் வசிக்கும் இளைஞரை காதலித்து வந்தார். இதனை விஜியின் தாய் கண்டித்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.
குடும்பத்தினர் விஜியை தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்தனர். அவர் எங்கும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் பாரப்பாளையத்தில் உள்ள பரமசிவன் கோவில் கிணற்றில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. அதனை பரிசோதித்ததில் அந்த பெண் சடலம் விஜியினுடையது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காதலுக்கு தாய் பச்சைக்கொடி காட்டாமல் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்து வந்ததால் விஜி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.