மரணத்தின் வாயிலை தொட்டுவிட்டு வந்த சிறுமியின் அதிர்ச்சி அனுபவம்!!

756

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் XL bully நாயால் கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவி, தாம் இறக்கப் போகிறோம் என ஒரு நொடி எண்ணியதாக குறிப்பிட்டுள்ளார். பர்மிங்காம் பகுதியில் இனிப்பு வாங்க தெருமுனை கடைக்கு தனியாக சென்ற 11 வயது சிறுமி XL bully நாயால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Ana Paun என்ற அந்த சிறுமி தமக்கு ஏற்பட்ட பகீர் அனுபவத்தை முதன்முறையாக பகிர்ந்துகொண்டுள்ளார். தம் மீது பாய்ந்த அந்த நாய், கீழ் இடது கையை கவ்விக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த நொடி, அது என் முகத்தையும் கழுத்தையும் தாக்கப் போகிறது, நான் இறந்துவிடப் போகிறேன் என்று நினைத்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயத்தில் வாய்விட்டு அலறியதாக கூறும் Ana Paun ஒருவழியாக காப்பாற்றப்பட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவளது மார்பு, தோள்பட்டை, கைகள் மற்றும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அது என்னைக் கொல்லும் என்று நினைத்தேன் என குறிப்பிட்டுள்ள சிறுமி, இப்படியான நாய் வகைகளை தடை செய்ய வேண்டும் என்றார்.

இந்த வகை நாய்கள் ஆபத்தானது மட்டுமின்றி கட்டுப்பாட்டை மீறும் குணம் கொண்டது என்றார். மேலும் சம்பவத்தின் போது உரிமையாளர் அதை தெருவில் தனியாக விட்டுவிட்டார் எனவும் Ana Paun குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், ஆபத்தான XL bully நாய்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்விவகார செயலர் சுவெல்லா பிரேவர்மேன் உறுதி அளித்துள்ளதை Ana Paun வரவேற்றுள்ளார்.

தம்மை தாக்கிய நாயின் உரிமையாளர் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள Ana Paun, அவர் அந்த நாயை கட்டுப்படுத்த தவறினார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சிறுமி Ana Paun-ஐ காப்பாற்ற நாயுடன் போராடிய இருவர் தற்போதும் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.