காதலியை கொலை செய்த காதலன்… உடலை சூட்கேஸில் அடைத்து விசிய கொடூரம்!!

297


குஜராத்தில்..மும்பை, நைகாவ் பகுதியில் வசித்தவர் நயனா மகந்த் (28). மேக்கப் கலைஞராக இருந்தார். இவர் மனோகர் சுக்லா (43) என்பவருடன் லிவ்-இன் டுகெதர் முறையில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்தார்.கடந்த சில நாள்களாக நயனா மகந்த்தைக் காணவில்லை. இது தொடர்பாக நயனாவின் சகோதரி போலீஸில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்துவந்தனர்.
விசாரணையில் மனோகருக்கு நயனாவுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து மனோகரைப் பிடித்து விசாரித்தபோது அவர்தான் நயனாவைக் கொலைசெய்து உடலை சூட்கேஸில் அடைத்து குஜராத் கடற்கரைப் பகுதியில் தூக்கிப் போட்டது தெரியவந்தது.

 உடனே அவரை போலீஸார் கைதுசெய்தனர். குஜராத் மாநிலம் வல்சாட் கடற்கரையில் சூட்கேஸ் ஒன்று மர்மமான முறையில் கிடந்தது. அதை போலீஸார் கைப்பற்றி திறந்து பார்த்தபோது உள்ளே நயனாவின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் பூர்ணிமா, “ நயனாவைக் கொலைசெய்த மனோகரிடம் விசாரித்தபோது, நயனா, மனோகர் மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்திருந்தார்.

அந்தப் புகாரை திரும்பப் பெறும்படி மனோகர் கேட்டுக்கொண்டார். ஆனால், நயனா புகாரைத் திரும்பப்பெற மறுத்துவிட்டார். அந்தக் கோபத்தில் நயனாவைக் கொலைசெய்து உடலை சூட்கேஸில் வைத்து குஜராத் கடலில் போட்டிருக்கிறார். மனோகருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருக்கிறது.


அவர்களுக்குள் இருந்த தொடர்பு மனோகர் மனைவிக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் மனோகர், நயனாவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டார். ஆனாலும் நயனா தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கூறி மனோகருக்கு நிர்பந்தம் கொடுத்துவந்தார்.

திருமணத்துக்கு மறுத்ததால் அவர்மீது நயனா பாலியல் வன்கொடுமைப் புகார் கொடுத்திருக்கிறார். கண்காணிப்பு கேமரா பதிவில் மனோகரும், அவரின் மனைவி பூர்ணிமாவும் சேர்ந்து சூட்கேஸை எடுத்துச் செல்வது போன்று பதிவாகியிருந்தது.

உடனே அவரின் மனைவியையும் பிடித்து விசாரித்தபோது இருவரும் சேர்ந்துதான் இந்தக் கொலையைச் செய்திருக்கின்றனர். நயனாவை மனோகர் தண்ணீர் இருந்த பக்கெட்டில் தலையை மூழ்கடித்து கொலை செய்திருக்கிறார்.

அவரது உடலை சூட்கேஸில் அடைக்க மனோகருக்கு பூர்ணிமா உதவி செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. பின்னர் சூட்கேஸை ஸ்கூட்டரில் வைத்து 180 கிலோமீட்டர் எடுத்துச் சென்று கடற்கரைப் பகுதியில் போட்டிருக்கின்றனர். உடலை எடுத்துச் செல்லும்போது யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக தங்களின் மகளையும் வண்டியில் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

நயனாவும், மனோகரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். நயனா தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். அந்நேரம் நயனாவுடன் மனோகருக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

2018-ம் ஆண்டு மனோகர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் நயனாவுடன் தனது உறவைத் தொடர்ந்தார். இருவரும் லிவ்-இன் டுகெதர் முறையில் வாழ்ந்திருக்கின்றனர்.

இது குறித்து மனோகர் மனைவி பூர்ணிமாவுக்குத் தெரியவந்திருக்கிறது. உடனே கணவருடன் பூர்ணிமா சண்டையிட்டிருக்கிறார். இதனால் பூர்ணிமா மனோகர் மீது பாலியல் வன்கொடுமை, தாக்குதல் ஆகிய பிரிவுகளில் போலீஸில் புகார் செய்திருக்கிறார்” என்று தெரிவித்தார். பூர்ணிமா அடிக்கடி மனோகரை மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மனோகரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.