மனைவி தன்னை ‘கிராமத்தான்’ என விமர்சித்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

632


கர்நாடகாவில்..இந்திய மாநிலம் கர்நாடகாவில் மெட்ரோ பொறியாளர் ஒருவர், மனைவி தன்னை விமர்சித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் துமக்குர் மாவட்டம் குந்தூரி பாளையா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (38).மெட்ரோ பொறியாளரான இவர் பிரியங்கா என்ற பெண்ணை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், மஞ்சுநாத் நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மஞ்சுநாத் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுநாத்தின் மனைவி பிரியங்கா ‘கிராமத்தான்’ என அடிக்கடி கூறி கணவரை விமர்சித்து வந்துள்ளார். அத்துடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


இதனால் மனமுடைந்த மஞ்சுநாத், தன் சகோதரருக்கு மனைவியின் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வதாக குறுந்தகவல் அனுப்பிவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் பேரில் பிரியங்கா மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.