கடன் செயலியின் கொடுமையால் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

1201

கேரளாவில்..

கேரள மாநிலம், கொச்சி அருகே வசித்துவந்தவர் நிஜோ(39). இவருக்கு சில்பா (29) என்ற மனைவியும், ஏபேல் (7), ஆரோன் (5) என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் முதல் மாடியில் வசித்துவந்த நிலையில், இவரின் சகோதரர் கீழ் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நிஜோ போனை எடுக்கவில்லை என அவரின் சகோதரருக்கு தொடர்ந்து அழைப்பு வந்த நிலையில்,அவர் மேல் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது உள்ளே நிஜோ மற்றும் அவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனே உள்ளே சென்றுபார்த்தபோது நிஜோவின் குழந்தைகள் படுக்கையில் இறந்த நிலையில், கிடந்துள்ளனர். உடனடியான இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை நடத்திவந்தபோது, நிஜோவின் உறவினர்கள் சிலருக்கு நிஜோவின் மனைவி சில்பாவின் மார்பின் செய்யப்பட்ட புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அதில், கடன்பெற்ற தொகையான 9,000 ரூபாயை உடனடியாகச் செலுத்தவிலை என்றால் இண்டிகா புகைப்படங்கள் மூக வலைதளங்கள் மூலம் அனைவருக்கும் அனுப்பப்படும் என்றும் ஒரு குறும்செய்தியும் அனுப்பப்பட்டிருந்தது.

தொடர்ந்து போலிஸார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன்பெற்றதும், அதை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில்,ஆன்லைன் கடன் செயலி கும்பல் சில்பாவின் புகைப்படத்தை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெரியவந்தது. இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.