சட்டத்தை பொதுமக்கள் கையில் எடுக்க முடியாது : பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில்!!

523

Army

சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அளுத்கமவில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அளுத்கமவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இதேவேளை நேற்று அளுத்கம பிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் மறுஅறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.