பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்!!

1289

எம்பிலிபிட்டியவில்..

எம்பிலிபிட்டிய, பனாமுர பிரதேசத்தில் யானை தாக்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (15-09-2023) பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானை ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போதே குறித்த பாடசாலை மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.

யானை தாக்கியதில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் எம்பிலிபிட்டிய கல்ஹமுன பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யானைக்கு பொறுப்பான யானை பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.