இலங்கையில் மிகவும் ஆபத்தான நபர் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

1614


இலங்கையில்..



இலங்கையில் மிகவும் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ தனது அடியாட்களை பயன்படுத்தி 39 கொலைகளை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



சில காலம் சிறையில் இருந்த கணேமுல்ல சஞ்சீவ 2021ஆம் ஆண்டு பிணையில் வெளிவந்து இரகசியமாக வெளிநாடு சென்றதாகவும், வெளிநாடு சென்று 2 வருடங்களில் 17 கொலைகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



மனிதக் கொலைகள் மட்டுமின்றி பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல், கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த பாதாள உலக தலைவரின் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸார் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கனேமுல்ல சஞ்சீவ போலி வெளிநாட்டு கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

-தமிழ்வின்-