மட்டக்களப்பில் சிகிச்சைக்கு சென்ற மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!!

781


மட்டக்களப்பில்..மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற 17 வயது மாணவி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திராய்மடு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் இப்சிபா என்ற (17) வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

க.பொ. த சாதாரண பரீட்சையில் தோற்றிய மாணவி பெறு பேறுக்காக காத்திருந்த நிலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளார். வைத்திய சாலையில் வழங்கிய மாத்திரைகளை பாவித்து வந்த போது கடந்த புதன் கிழமை காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து தாயார் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாணவியை அழைத்துச் அழைத்து சென்றுள்ளார்.


இதனையடுத்து மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (15/09/23)ஆம் திகதி அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் மாணவியின் உயிரிழப்புக்கு மருத்துவமனையே காரணம் என உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளது.